ஈ.ஏ.எஸ்.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் 13 நாட்கள் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராபர்ட் கென்னடி பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்தார்.
இப்பயிற்சி முகாமில், அறிவியல் மற்றும் கலைப்பிரிவு டீன் ரத்தினம், “திறமையான தகவல் பரிமாற்றம் மற்றும் பிறருடன் நல்லுறவு பேணும் திறன்” என்ற தலைப்பிலும், மனிதவள மேம்பாட்டு இயக்குநர் சரவணன், “கல்லூரி கலாச்சாரம், தலைமைப்பண்பு, ஆசிரியர்களுக்கான வெற்றி, மனிதவளக் கொள்கை, ஆசிரியர்களுக்கான பலன்கள், பணி நெறி ஆகிய தலைப்புகளிலும், மாணவர் விவகாரத்துறை டீன் மஞ்சு, மாணவர்-ஆசிரியர் விதிமுறைகள் குறித்தும் உரையாற்றினர்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை டீன் சிவக்குமார், “ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திட்டமிடல், ஒருங்கிணைந்து செயல்படல், வழிகாட்டுதல், குழுவாக செயல்படுதல், காப்புரிமை, பதிப்பு, குழு ஆராய்ச்சி ஆகிய தலைப்புகளிலும், டீன் நடராஜன், பாடத்திட்ட வடிவமைப்பு குறித்தும் விளக்கினர்.
