கோவை வ.உ.சி பார்க்கில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையம், சாய்பாபா காலனியில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் விற்பனை நிலையத்தில் பட்டு மேளா – பழசுக்கு புதுசு சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது.
இதில் பழைய பட்டுப் புடவைகளை மாற்றிக் கொண்டு அதற்கான மதிப்பில் வேறு எந்த ரகங்களையும் பெறலாம். இதற்காக பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், இயற்கை சாயமிட்ட பருத்தி காட்டன் சேலைகள், காஞ்சி காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், சுங்குடி சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார் ரகங்கள், குர்தீஸ், நைட்டிகள், ஆடவர்களுக்கான லினன், ரிங்க்கிள் ஃப்ரீ, ஸ்லிம்ஃபிட் ரெடிமேட் சட்டைகள் ஏராளமாக வரவழைக்கப்பட்டுள்ளன.
கோ-ஆப்டெக்ஸ் கோவை மருதம் விற்பனை நிலையம், ஹேண்ட்லூம்ஸ் ஆஃப் இந்தியா பை கோ-ஆப்டெக்ஸ், ஸ்ரீபாலமுருகன் சாய்பாபாகாலனி, கிராஸ்கட்ரோடு ஆகிய விற்பனை நிலையங்களில் பழசுக்கு புதுசு மற்றும் 40 % முதல் 90 % வரையிலான சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுவதாக முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி தெரிவித்துள்ளார்.
