மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, கோவையில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை வழங்கி வந்த இண்டிகோ நிறுவனம், போர்ப் பதற்றம் தணியும் வரை சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்து இருந்தது.

இந்நிலையில், கோவையில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமான நிறுவனம் ஆகஸ்ட் 15 முதல் மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்குகிறது. இந்த சேவை வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படும். அதன்படி ஞாயிறு, செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விமானங்கள் இயக்கப்படும்.

அபுதாபியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் விமானம், கோவையை மதியம் 12.55 மணிக்கு அடையும். கோவையில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும் விமானம், அபுதாபியை மாலை 5.25 மணிக்கு அடையும்.