கோவையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் தொடங்கி வைத்தார். பேரணியில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

cover 6a scaled

போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி கோவை கிளை தலைவர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்

cover 6b scaled

நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையாளர் பேசுகையில்: போதைப்பழக்கம் என்பது ஒரு பேயை போன்றது. இளைஞர்கள் ஒரு தடவை செய்தால் அது நம்மளை பிடித்துக் கொள்ளும். போதை பொருள் பயன்படுத்துவது ஒரு சமூக குற்றம். இதைப் பயன்படுத்தினால் வாழ்க்கையே கேள்வி குறியாகிவிடும் என்றார்.

தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.