சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட பிரிவு ஆகியவை இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் செவிலியர் கல்லூரியின் முதல்வர் கிரிஜா குமாரி, சிங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தினேஷ் பாபு, மாணவர்கள் கலந்துகொண்டனர்.