தமிழ்நாடு மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் மேசைப்பந்து தரவரிசைப் போட்டி 2026, கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.
போட்டியில் தமிழ்நாட்டின் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தலைமை விருந்தினராக எமரால்ட் ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக தியா அறக்கட்டளையின் இயக்குந ஸ்ரீராம், கோயம்புத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கங்கா மருத்துவமனையின் தலைவர் மற்றும் கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.
