நேரு கல்விக் குழும நிறுவனங்களின் நிறுவனர் பி.கே. தாஸின் 17வது நினைவு நாள் நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நேரு கல்விக் குழும நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலரும், செயலருமான கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். கல்விக் குழுமத்தின் செயல் இயக்குநர் நாகராஜா, நேரு கல்விக் குழும நிறுவனங்களின் பதிவாளர் (பொறுப்பு) அனிருதன், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் விஜயகுமார் கலந்து கொண்டார். ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சிறப்பு விருந்தினராக 51 சக்தி பீட மகாசம்ஸ்தானத்தின் சக்தி ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் கலந்துகொண்டார். தொடர்ந்து 10, 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற நேரு கல்விக் குழும நிறுவனப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கேடயங்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
