ரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், என்.பி.டி.இ.எல் லோக்கல் சாப்டர் ரேங்கிங்ஸ் 2026ல், இந்திய அளவில் 2வது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் சிறந்த 200 என்.பி.டி.இ.எல் லோக்கல் சாப்டர்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ள ரத்தினம், ‘A’ பிரிவில் 165வது ஒட்டுமொத்த தரவரிசையை பெற்றுள்ளது. மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பிரிவில் இந்திய அளவில் 2வது சிறந்த கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
என்.பி.டி.இ.எல் என்பது இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றின் முன்னெடுப்பாக உருவாக்கப்பட்ட நாட்டின் மிக உயரிய ஆன்லைன் கல்வித் தளங்களில் ஒன்றாகும். இது தரமான கல்வி, தொழில் சார்ந்த திறன்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் என்ற நோக்கத்துடன் பல்வேறு பாடநெறிகளை வழங்கி வருகிறது.
