கோவையில் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் லார்சன் & டூப்ரோ (எல்&டி) நிறுவனம் புதிய திட்டத்தை தொடங்க உள்ளது.
ரூ.18,600 கோடி முதலீட்டில் 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் லார்சன் & டூப்ரோ (எல்&டி) நிறுவனம் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.15,000 கோடி முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தகவல் தரவு மைய விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
கோவையில் ரூ.2,500 கோடி முதலீட்டில் 2,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், ரூ.1,100 கோடி முதலீட்டில் 5,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காட்டுப்பள்ளி எல்&டி கப்பல் கட்டும்தளம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

