கோவை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தவறுதலாக விழுந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை, பேராசைப்படாமல் நேர்மையுடன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர் சக்திவேல் என்பவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 69, பாரதி பார்க் 4-வது வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், தங்களின் வீட்டில் இருந்த குப்பைகளை அகற்றும் போது, எதிர்பாராத விதமாக 3 பவுன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியையும் குப்பையோடு குப்பையாகத் தவறுதலாக வீசியுள்ளனர்.
வீடுகள்தோறும் வழங்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் தூய்மைப் பணியில் ஈடுபடும்போது குப்பையில் தவறுதலாக கிடந்த சுமார் 3 பவுன் தங்கச் செயினை உடனடியாக நகை உரிமையாளரிடம் வழங்கினார். இவரின் நேர்மையான செயலை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், பாராட்டி சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார்.

