கோவை அருகே 10 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, குழந்தையின் சித்தி  செய்தியாளர்களிடம்  கூறுகையில், “முதலமைச்சர் விஜய் அவர்கள் இதுவரை எங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை. சம்பவம் அவரது கவனத்துக்கு சென்றிருந்தும் எந்தவிதமான பதிலும் இல்லை என்பது மிகுந்த வருத்தமாக உள்ளது. உடனடியாக முதலமைச்சர் வருத்தம் தெரிவித்து எங்களை ஆறுதல் கூற வேண்டும்,” எனக் கோரிக்கை வைத்தார்.

மேலும், “அமைச்சர்கள் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் வந்து ஆறுதல் கூறியுள்ளனர். அதற்கு நன்றி. ஆனால் மாநிலத்தின் தலைவராக முதலமைச்சரின் பதில் எங்களுக்கு முக்கியம்,” என்றும் தெரிவித்தார்.

குற்றவாளி குறித்து கடும் கோபத்துடன் பேசிய அவர், “இந்த கொடூர குற்றத்திற்கு காரணமானவருக்கு மிகக் கடுமையான தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.

காவல்துறையின் செயல்பாடு குறித்தும் அதிருப்தி தெரிவித்த அவர், “நேற்றைய தினம் காவல்துறை அதிகாரிகள் மாற்றி மாற்றி முரண்பட்ட தகவல்களை தெரிவித்தனர். இது எங்களுக்கு மேலும் வேதனை அளித்தது,” என்று குற்றம்சாட்டினார்.