தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மே 19, 20 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

தக்காளியில் உலர்த்தப்பட்ட தக்காளி, ஊறுகாய், சாஸ், கெட்ச்அப், சூப் பவுடர், ஜாம் போன்றவையும், கற்றாழையில் பழரச பானம், தயார் நிலை பானம், பானம், மிட்டாய் ஆகிய தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770 பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்.

பயிற்சி நடைபெறும் இடம் – அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641 003.