‘சிஎம்ஓதமிழ்நாடு’ என்ற பெயரில், தமிழ்நாடு முதலமைச்சருக்கு இன்ஸ்டாகிராம், எக்ஸ் தள பக்கம் உள்ளது. இதில் முதல்வரின் நடவடிக்கைகள், நலத்திட்ட உதவிகள், தலைவர்கள் சந்திப்பு, அரசு திட்டங்கள் தொடங்கி வைத்தல், அரசு நலத்திட்ட அடிக்கல் நாட்டு விழா போன்ற பல்வேறு அரசு துறை சார்ந்த பதிவுகள் பதிவேற்றம் செய்யப்படுவது வழக்கம்.
தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத்தின் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து ‘சிஎம்ஓதமிழ்நாடு’ என்ற எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விஜய்யின் புகைப்படம், அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த புகைப்படங்களை வைக்கப்பட்டது.
முன்னதாக, இந்த டிவிட்டர் கணக்கை 4 லட்சம் பாலோயர்கள் பின்தொடர்ந்து இருந்தனர். இந்நிலையில் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துள்ளது. மே 11 ஒரே நாளில் மட்டும் 11 லட்சம் பின்தொடர்வோர்களைக் கடந்தது. தற்போதைய நிலவரப்படி, 17 லட்சம் (1.7 மில்லியன்) பின்தொடர்வோர்களைக் கொண்டுள்ளது.
