தமிழ்நாட்டில் 13வது முதலமைச்சராக விஜய்க்கு, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை தொடர்ந்து, 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். விஜய் முதல்வரானதும் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த அற்புதமான மாநிலத்தின் மக்கள் வைத்திருக்கும் உயர்ந்த நோக்கங்களை நிறைவேற்ற பொறுப்பேற்கும் புதிய அரசாங்கத்திற்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.” எனக் கூறியுள்ளார்.