கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இந்திய மருந்தியல் ஆணையத்தின் செயலாளர் மற்றும் அறிவியல் இயக்குனர் கலைசெல்வன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளும், மெடல்களும் வழங்கப்பட்டது.  விழாவில் கல்லூரியின் தலைவர் வசந்தகுமார், கல்லூரியின் முதல்வர் ராம் காந்த், கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் முருகையா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.