தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மே மாதத்திற்கான பயிற்சி வரும் 5ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று அளிக்கப்படும்.
பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் பயிற்சி நாளன்று பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமான ரூ.850 நேரிடையாக செலுத்த வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு ரூ.590 செலுத்த வேண்டும். அடையாள சான்று அவசியம். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். காலை 10 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வழங்கப்படும்.
