கோவை மாநகரின் முக்கிய சாலை பகுதிகளில் ஒன்று மேட்டுப்பாளையம் சாலை. இவ்வழியே உள்ள வடகோவை மேம்பாலம் காந்திபுரம், 100 அடி சாலை, கிராஸ் கட், ஆர்.எஸ்.புரம் போன்ற இடங்களை எளிதில் அணுக உதவக்கூடிய கட்டமைப்பாக உள்ளது.

இம்மேம்பாலத்தின் சுரங்கப்பாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலை பல காலமாக தொடர்கிறது.
coveds scaledபாதசாரிகள் கிராஸ் கட் சாலை வழியே வரும்போதும், மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும்போதும், வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வரும்போதும் பல்வேறு இடங்களில் இருந்து இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தமுடியும் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியும்.

ஆனால் இந்த இடங்கள் அனைத்திலும மது பாட்டில்கள், உணவு கழிவுகள், குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. மாலை நேரத்தில் சுங்கப்பாதையின் படிக்கட்டுகள் அருகே எந்த மின் விளக்கு வெளிச்சமும் இல்லை.
undepas scaled
மின் வயர் இணைப்புகள் அறவே கிடையாது. முற்றிலும் பழுதடைந்து உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை. பயன்படுத்த அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த சுரங்கப்பாதை உள்ளது.
worstas scaled30 ஆண்டுகள் பழமையான இந்த மேம்பாலத்தை குறைகள் ஆராயப்பட்டு அவற்றை சீரமைக்க நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என ஜனவரி மாதம் தகவல் வெளிவந்தது.
risypas scaled
அதன் பின்னர் தேர்தல் திருவிழா இப்போது அப்போது என பேசப்பட்டதால், இதன் நகர்வின் வேகம் குறைந்தது. இந்நிலையில் விரைவில் தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில், இந்த மேம்பாலத்தை சீரமைக்க, குறிப்பாக இதன் சுரங்கப்பாதை மேல் அரசு கவனம் செலுத்தவேண்டும்.