தமிழக அரசின் பொதுப்பணி துறை சார்பில் கோவை காந்திபுரம் பகுதியில் 6.98 ஏக்கர் நிலப்பரப்பில், 1.98 லட்சம் சதுரடியில் ரூ.300 கோடி மதிப்பில் 7 தளங்கள் கொண்ட தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் (பெரியார் அறிவுலகம்) கட்டும் பணிகள் இறுதி நிலையை எட்டி உள்ளது.

கட்டுமான பணிகள், பார்க்கிங் தொடர்பான வளாகம் எல்லாம் நிறைவடைந்துள்ளது எனவும், அறிவியல் மையம் தொடர்பாக நிறுவப்படவேண்டிய பொருட்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை கொண்ட நூலகமாக இது இருக்கும். இதற்கான 25,000+ புத்தகங்கள் கிடைக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 1 லட்சம் புத்தகங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

“கட்டுமான பணிகள் நிறைவேறி விட்டன. அறிவியல் மையம் தொடர்பான நிறுவல்கள் தொடர்பான சோதனைகள் நடக்கிறது. மிஞ்சி உள்ள சிறு அளவிலான பணிகள் மே மாதத்தில் முற்றிலும் முடிந்துவிடும். திறப்பு அரசு அறிவிப்பை பொறுத்து முடிவு செய்யப்படும் ,” என பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறினார்.