டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2022-2026ம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு  பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் மற்றும் தாளாளர் ஹரிஹர சுதன் வாழ்த்துரை வழங்கினர்.

கெளரவ விருந்தினராக நம்மபூமி நிறுவனர் அருள்பிரியா கலந்துகொண்டு பேசுகையில்: வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அணுகுங்கள். தாய்மை இடைவேளையில் சமூகப் பிரச்சினைகளை சிந்தித்ததே நம்மபூமி உருவாக காரணமாக இருந்ததாகவும், சுற்றியுள்ள பிரச்சினைகளுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கெளரவ விருந்தினராக பங்கேற்ற திங்க்சால்வ் டெக்னாலஜீஸ் பைவர்ட் லிமிடெட் நிறுவனர் விக்ரம் ஆறுசாமி பேசுகையில்: பொறியாளரின் அடையாளம் பட்டப்படிப்பால் மட்டுமல்ல. சிந்தனையுடன் எடுக்கப்படும் முடிவுகளால் உருவாகும் தனித்துவம். மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை தெளிவாகப் புரிந்து, நீண்டகால நோக்குடன் திட்டமிட்டு செயல்பட வேண்டும். சவால்களை கடக்கும் மனவலிமையே உண்மையான வெற்றி என்றார்.

கல்லூரியின் இணை செயலர் மற்றும் முதல்வர் கோவிந்தசாமி, என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.