கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாகுபலி என்று பொதுமக்களால் பெயரிடப்பட்ட ஆண் காட்டு யானை சில ஆண்டுகளாக இப்பகுதியிலேயே சுற்றி வருகிறது. அவ்வப்பொழுது வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானை போக்குவரத்து மிகுந்த உதகை சாலையை கடந்து மற்றொரு வனப்பகுதிக்கு சென்று உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்வது வழக்கம்.

elephant 2 scaled

இந்நிலையில் உதகை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு வந்த பாகுபலி யானை மீது சிலர் பட்டாசுகளை வீசி, விரட்ட முற்பட்டனர். வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுதும் அவர்களது எச்சரிக்கையை மீறி காட்டு யானை மீது பட்டாசுகளை சரமாரியாக வீசினர். இது யானையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் பட்டாசு வெடித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.