கோவைக்கு கேரளா, புதுக்கோட்டை, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரி மற்றும் டெம்போ வாகனங்கள் மூலம் இரவு நேரங்களில் பலாப்பழங்கள் கொண்டு வரப்படுகின்றன.
அதிகாலை நேரத்தில் கோவை உக்கடம் பெருநகர பழ மண்டி வளாகத்தில் வியாபாரிகள் கூடிவிட்டு, ஏல முறையில் பலாப்பழங்களை வாங்கி செல்கின்றனர். பின்னர், சிறு வியாபாரிகள் அந்த பலாப்பழங்களை வாங்கி நகரின் பல்வேறு பகுதிகளில் சில்லறை விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பலாப்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில்: கோடை காலம் தொடங்கியுள்ளதால் பலாப்பழ வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் பண்ருட்டி பகுதிகளில் இருந்து தரமான பலாப்பழங்கள் வருவதால் விற்பனை நல்ல நிலையில் உள்ளது. விலை அளவும் பழத்தின் தரத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. இந்த சீசனில் தினமும் அதிகளவில் வர்த்தகம் நடைபெறுகிறது என்றார்.
பலாப்பழ சீசன் துவங்கியதன் மூலம் வியாபாரிகளுக்கும், சிறு விற்பனையாளர்களுக்கும் நல்ல வருமான வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும், பொதுமக்களும் சுவையான மற்றும் சத்தான பலாப்பழத்தை எளிதில் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
