ஊட்டியில் உள்ள நீலகிரி கல்வி குழுமம் மற்றும் ஜி டெக் கணினி மேம்பாடு மையம் இணைந்து, ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பள்ளி மாணவர்களுக்காக ரோபோ கலரிங் போட்டியை நடத்தியது.
இதில் மொத்தம் 1411 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற 141 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் முதன்மை விருந்தினராக ரோட்டேரியன் தேசிங்கராஜன் கலந்து கொண்டு, மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, சரியான நேரத்தில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
விழாவில் நீலகிரி கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஷேக் அஹமது ஷெரீப், ஜி-டெக் 5 மாவட்டத் தலைவர் ஜனார்த்தனன், அக்குபிரஷர் நிபுணர் டாக்டர் முகமது ரமேஸ், யூடியூபர் விக்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட நீலகிரி கல்வி மையம், பாரதியார், பாரதிதாசன் மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் மூலம் இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்முறைப் படிப்புகளுக்குத் தொலைநிலை, பகுதிநேர மற்றும் இணையவழி முறைகளில் கல்வி அளிக்கிறது. மேலும், 10, 12ம் வகுப்புக்கான ஓபன் ஸ்கூலிங் வசதியும் இங்கு வழங்கப்படுகிறது.
