ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சார்பில், சமூகத்தின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் “எழுந்தமிழ்” விருது வழங்கும் விழா நடைபெற்றது. ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு துறை இயக்குனர் டாக்டர் கவிதாசன் கலந்துகொண்டார்.

இதில் ஆன்மீகத்தமிழ் மாமணி விருது – திருப்பெருந்துறை இராமானந்த குமரகுருபர சுவாமிகள், இயற்றமிழ் மாமணி விருது – கோவை கிருஷ்ணா, இசைத்தமிழ் மாமணி விருது – அருள்மொழி கார்த்திகேயன், நாட்டியத்தமிழ் மாமணி விருது – ஸ்ரீகீதா ரமேஷ், அறிவியல் தமிழ் மாமணி விருது – கவிதா, ஊடகத்தமிழ் மாமணி விருது – சோலை தமிழினியன், நாடகத்தமிழ் மாமணி விருது – ராஜசேகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.