ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா நடைபெற்றது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் சௌந்தர்ராஜன் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக, தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கலந்துகொண்டு பேசுகையில்: ஆர்வம், தன்னம்பிக்கை, அறிவு, தகவல் தொடர்பு திறன் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு அத்தியாவசியமான குணங்களாக அவர் எடுத்துரைத்தார்.
கல்லூரியை பற்றிய தகவல்கள், கல்லூரி அடைந்த தொழில் நுட்ப வளர்ச்சி, கல்லூரியில் அமைந்திருக்கும் ஆராய்ச்சி கூடங்கள் பற்றிய தரவு வெளியிட்டு விழா நடைபெற்றது. கல்லூரியின் விழா மலரை சிறப்பு விருந்தினர் வெளியிட நிர்வாக அறங்காவலர் பெற்றுக்கொண்டார்.
விழாவின் ஒரு பகுதியாக கல்லூரியில் 25 ஆண்டுகள் பணியாற்றி துவக்க நாள் முதல் சிறப்பாக சேவையாற்றி வரும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களும், காப்புரிமை பெற்று சாதனை படைத்த பேராசிரியர்களும், சிறந்த ஆராய்ச்சி புரிந்த பேராசிரியர்களும் சிறந்த என்சிசி கேடட் விருது, என்.எஸ்.எஸ் சிறந்த தன்னார்வலர் விருது, சிறந்த புதுமை கண்டுபிடிப்புகள், கலைத்துறையின் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பரிசு வழங்கிப்பட்டன.
கல்வியாண்டில் கல்வி விளையாட்டு மற்றும் அனைத்து ஊக்க திறன் மேம்பாடு துறைகளில் சிறப்பாக செயல் புரிந்தமைக்காக தங்கப்பதக்கம் மற்றும் சுழற்கோப்பையுடன் சிறந்த மாணவர் விருது எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையை சார்ந்த மாதேஷ் என்ற மாணவருக்கும், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறையை சார்ந்த ஷர்மிளா என்ற மாணவிக்கும் வழங்கப்பட்டது.
