தன்னை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற செய்தால், கவுண்டம்பாளையம் மக்களிடம் பிரதமரின் திட்டங்களை கொண்டுசேர்க்க உறுதுணையாக இருப்பேன் என அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் இன்று பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடம் கூறினார்.
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஜி.என். மில்ஸ் சுற்றுப்பகுதிகளில் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
அவர் பொதுமக்களிடம் பிரச்சாரத்தின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள அனைத்து நலத்திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உறுதுணையாக இருப்பேன் எனவும் பிரதமர் மோடியின் திட்டங்களை இந்த பகுதிக்கு கொண்டுவரவும் உறுதுணையாக இருப்பேன் என உறுதி அளித்தார்.
அதிமுக வேட்பாளரான தனக்கு கவுண்டம்பாளையம் வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றியை தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
