கோடை காலம் வெளுத்து வாங்கி வரும் நிலையில் எங்கே போனது கோடை மழை என்ற கேள்வி கோவை மக்களிடம் எழுந்துள்ளது.
இதுகுறித்து கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சுஜயிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது :-
இந்த வாரத்தில் கோவை மாநகரில் மழைக்கு வாய்ப்பு இல்லை. வறண்ட வானிலை தான் நிலவக்கூடும். வெப்பம் என்பது அதிகபட்சம் 38° செல்ஸியஸ் முதல்ல 39° செல்ஸியஸ் வரை போகலாம். இப்போது உள்ள தகவல்களை வைத்து பார்க்கும் போது அடுத்த வாரமும் இதே போலத்தான் சூழல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மழைக்கு அடுத்தவாரம் வாய்ப்பு மாநகரில் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
