கோவை துடியலூர் அருகே வடமதுரையில், கவுண்டம்பாளையம் தொகுதியில் மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சூரிய பிரகாஷ் அறிமுகக் கூட்டம் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
வேட்பாளர் சூரிய பிரகாஷ் பேசுகையில்: கூட்டணி கட்சியினர் தீவிரமாக உழைத்து தன்னை வெற்றிபெறச் செய்து, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினை இரண்டாவது முறையாக பதவி ஏற்க உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது: காங்கிரஸ் வேட்பாளர் சூரிய பிரகாஷிற்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் ஒவ்வொரு பகுதியிலும் அதிக வாக்குகள் வாங்கிக் கொடுக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஒரு பவுன் தங்க நாணயம் வழங்கப்படும். வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதலமைச்சரானதும் கோவைக்கு வரும்போது அவரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார்.
