தமிழ்நாடு அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கி வருகிறது.
வரும் 23ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளென்பதால் அன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத தொழிற்ச்சாலைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் செ.ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவுரைகளின்படி, மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட வாக்களிக்க வசதியாக அனைத்து பணியாளர்களும் தேர்தல் நாளில் அவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்குவது கட்டாயமாகும்.
எனவே, அனைத்து தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களும் வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ம் தேதி அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
