ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றத்தின் சார்பில் 100% வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில், மாணவிகள் முகவர்ணம் பூசி, கல்லூரி வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் வருகின்ற 23 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கல்லூரி மாணவிகள் முகத்தில் வர்ணம் பூசிக் கொண்டு, வாக்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், கை விரலில் மை பதிந்திருப்பதை பிரதிபலிக்கும் முறையில் விழிப்புணர்வு நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.
