ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பெங்களூரு மடிவாலாவில் நடைபெற்றது. சுமார் 120 முன்னாள் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் இணை அறங்காவலர் நரேந்திரன் சௌந்தரராஜன் தலைமை வகித்தார். இதில் கல்லூரியின் முதல்வர் டேவிட் ரத்னராஜ், சங்கச் செயலாளர் மோகனப்ரியா, இணைச் செயலாளர் திவ்யா, துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
