கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் 2021-2024 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணாக்கர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி கலந்து கொண்டு, பட்டம் பெற்ற ஒவ்வொருவரும் தங்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குவதோடு, சிறந்த தொழில் முனைவோராகத் திகழ்ந்து, தொழில் துறையிலும் தடம் பதிக்க வேண்டும் என மாணவர்களிடம் எடுத்துரைத்து வாழ்த்தினார்.

இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தின் இயக்குநர் காமகோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்குப் பட்டமளித்து பேசுகையில்: இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாணவர்கள் தங்கள் அறிவினை வளர்த்துக் கொண்டு, தகவல் தொழில்நுட்ப நுணுக்கங்களில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நிகழ்வில் கல்லூரியின் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் கீதா, கே.பி.ஆர் ஆலையின் துணைத் தலைவர் சோமசுந்தரம், கே.பி.ஆர் மகளிர் கல்வி மேம்பாட்டு மையத்தின் முதல்வர் சரவணபாண்டி மற்றும் கல்லூரியின் புல முதன்மையர்கள் குமுதாதேவி, ஜோதி, ஆனந்த் ஜெரால்டு, ரஞ்சிதா குமாரி, பிரதீபா ஆகியோர் பங்கேற்றனர். 740 மாணவ, மாணவியர்கள் பட்டம் பெற்றனர்.

