கோவையில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் ஹோண்டா இந்தியா பவுண்டேசன் மற்றும் உயிர் அமைப்பு இணைந்து “மாதிரி சாலை பாதுகாப்பு நகரம்” திட்டத்தை அறிமுகப்படுத்தியது. திட்டத்தின் தொடக்க விழா ஹோண்டா சில்ட்ரன்ஸ் ட்ராபிக் பார்க்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஹோண்டா நிறுவன அதிகாரி பிரபு நாகராஜ் திட்ட விளக்கத்தை வழங்கினார். உயிர் அமைப்பின் அறங்காவலர் பாலசுந்தரம் வரவேற்புரையாற்றினார். நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜசேகரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த திட்டத்தில் புதிய ஓட்டுநர்களுக்கான பயிற்சி, தலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு முகாம்கள், சாலை பாதுகாப்பு ஆய்வுகள், அவசர உதவி குழுக்களுக்கு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த முயற்சி கோவையை மாதிரி சாலை பாதுகாப்பு நகரமாக மாற்றுவதோடு, இந்தியாவின் பிற நகரங்களுக்கும் முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
