தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மிட்டாய்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.

சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகளுக்கு தற்பொழுது மக்கள் மத்தியில், அதிக வரவேற்பு உள்ளது. அதற்கான முக்கியக் காரணம் விரும்பத்தக்க வகையிலும் பற்சுவைகளிலும் மிக எளிதில் இவை கிடைப்பதேயாகும்.

இந்தப்பயிற்சி சிறுதொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தைப் பெருக்க பெரிதும் உதவியாக இருக்கும். சாக்லேட், கடலை மிட்டாய், சர்க்கரை மிட்டாய் வகைகளை எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆர்வமுள்ளவர்கள் ரூ.750 செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சி நடைபெறும் இடம் – அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்- 641 003