எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லுாரியில் கல்லுாரிகளுக்கு இடையேயான தொழில்நுட்ப விழா நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலுமிருந்து 3 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்ப போட்டிகளில் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக ஜென்பேக்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் அருண் வெங்கடரமணி கலந்துகொண்டார். நிகழ்வில், மாணவர்களின் கலைப்படைப்புகள், கட்டுரைகள் அடங்கிய டேலேண்ட்ரா என்ற நினைவிதழ் வெளியிடப்பட்டது.
நாட்டுப்புற மற்றும் பின்னணிப் பாடகர் அந்தோணி தாசன், மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு பாடல்களை பாடினார். எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் தளாளர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல் குமார், கல்லூரி முதல்வர் சார்ல்ஸ், நிர்வாக இயக்குனர் செந்தூர்பாண்டியன் பங்கேற்றனர்.
