உக்கடம் பேருந்து நிலையத்தை ரூ.21.55 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  தொடர்ந்து, முதற்கட்டமாக ரூ.13 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட உக்கடம் பேருந்து நிலையத்தை, சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

உக்கடம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மேயர்  ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

3 13

இப்பேருந்து நிலையத்தில் 58 பேருந்துகள் (முனையம் 1 மற்றும் 2) நிறுத்தும் தளங்கள், 80 எண்ணிக்கையிலான பேருந்துகள் இயங்கும் வகையில் வளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 3 சுத்தமான மற்றும் சுகாதாரமான கழிவறை, 2 வணிக வளாகங்கள், நவீனமயமான கூரை, 60 பயணிகள் அமரும்  வகையில் காத்திருப்பு இருக்கைகள், 2  தாய்மார்கள் பாலூட்டும் அறை, நேரடி பேருந்து கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் அறிவிப்புகள், பொது வைபை மற்றும் மொபைல் சார்ஜிங் வசதிகள், மாற்றுதிறனாளிகளுக்கான தடையில்லா அணுகல், 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அதை கண்காணிக்கும் வகையில் அறை மற்றும் அவசர பதிலளிப்பு அமைப்புகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

1 14 scaled