கோவையில் இயங்கும் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை, அதிநவீன தீவிர சிகிச்சை அளிப்பதில் இந்தியாவில் ஒரு முன்னணி மையமாகத் திகழ்கிறது.

குறிப்பாக, இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்த நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ‘எக்மோ’ (ECMO) எனப்படும் செயற்கை சுவாசக் கருவி மூலம் மறுவாழ்வு அளிப்பதில் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளது.

எக்மோ என்பது ஒரு நோயாளிக்கு இதயம் மற்றும் நுரையீரல் தானாகச் செயல்பட முடியாத நிலையில் அளிக்கப்படும் ஒரு சிறப்பு சிகிச்சை முறை ஆகும். இது நோயைக் குணப்படுத்தாவிட்டாலும், உடல் உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையைத் தானே செய்து, நோயாளியின் உடல் தானாகவே குணமடைவதற்குத் தேவையான ‘கூடுதல் நேரத்தை’ வழங்குகிறது. உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

உடலில் இருந்து ரத்தத்தை மெதுவாகக் குழாய்கள் மூலம் வெளியே எடுக்கிறது. அந்த ரத்தத்தை ஒரு கருவிக்குள் செலுத்தி, அதில் ஆக்சிஜனை சேர்த்து, கரியமில வாயு எனும் கார்பன் டை ஆக்சைடை நீக்குகிறது. இதன் பின் சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை மீண்டும் நோயாளியின் உடலுக்குள் செலுத்துகிறது.

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் அதிநவீன வசதிகள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவக் குழுவின் உதவியுடன், கடந்த 5 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட எக்மோ சிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2025-ஆம் ஆண்டில் மட்டும் 75 எக்மோ சிகிச்சைகளை அளித்துள்ளது. இது தமிழகத்திலேயே மிக அதிக எண்ணிக்கையாகும். இதன் மூலம் இந்தியாவின் மிகச்சிறந்த எக்மோ சிகிச்சை மையங்களில் ஒன்றாக கேஎம்சிஹெச் உருவெடுத்துள்ளது.

தமிழகத்திலேயே இரண்டாவது மருத்துவமனையாக ‘எக்மோ ஆம்புலன்ஸ்’ (ECMO Ambulance) வசதியை கேஎம்சிஹெச் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை எக்மோ கருவியின் உதவியுடனேயே பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்து வர முடியும்.

யார் பயன்பெறலாம்?

வென்டிலேட்டர் அல்லது மருந்துகளுக்குக் கட்டுப்படாத, மீண்டும் குணப்படுத்தக்கூடிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு எக்மோ சிகிச்சை வழங்கப்படுகிறது. நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே இந்தச் சிகிச்சையைத் தேர்வு செய்வது சிறந்த பலனைத் தரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உங்கள் உறவினர்கள் யாராவது தீவிர சிகிச்சையில் இருந்தும் முன்னேற்றம் தெரியவில்லை எனில், எக்மோ சிகிச்சைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்குமாறு கேஎம்சிஹெச் கேட்டுக் கொள்கிறது.

மேலும் தகவலுக்கு: கேஎம்சிஹெச் எக்மோ குழுவைத் தொடர்பு கொள்ள: 0422-4323647 / 4323195.