ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின் சார்பில், இந்தியாவின் மருந்தியல் கல்வியின் தந்தை மகாதேவ லால் ஷ்ராஃப் பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய மருந்தியல் கல்வி தினம் கொண்டாடப்பட்டது.

இதில் கோவை மண்டலம் மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் ராம் பிரபு, ஒழுங்குமுறை தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யும் மருந்து ஆய்வாளர்களின் முக்கிய பங்குகளை விவரித்தார்.

சென்னை பீனிக்ஸ் பயோலாஜிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் சொக்கலிங்கம், மருந்துகளை தயாரிப்பதில் தர மேலாண்மை அமைப்புகளின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

SNR 2 scaled

ஓவியா மெட்சேஃப் நிர்வாக இயக்குனர் விஜய் வெங்கடராமன், மருந்தகத் தொழிலில் மருந்தகக் கண்காணிப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

பசுமை பார்மசி பிரைவேட் லிமிடெட்ட நிறுவனர் பனையப்பன், நோயாளி ஆலோசனை, மருந்துச் சீட்டு மதிப்பாய்வு மற்றும் மருந்து மேலாண்மை ஆகியவற்றில் பாதகமான மருந்து எதிர்வினைகளை தடுக்க சமூக மருந்தாளுநர்களின் முக்கிய பங்கை வலியுறுத்தினார்.

ஸ்பினோஸ் லைஃப் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் பிரைவேட் லிமிடெட், நிர்வாக இயக்குநர் அபிராம சுந்தரி மருந்தகக் கல்வியில் ஆராய்ச்சி, தொழில் முனைவோர் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

SNR scaled

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக குழு விவாதம் நடைபெற்றது. நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி முதல்வர் ஸ்ரீராம், துணை முதல்வர் கோபால் ராவ், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் கலந்துகொண்டனர்.