விசாகப்பட்டினத்தில் தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சதுரங்கப் போட்டி அண்மையில் நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாண்டு பயிலும் மாணவி லக்ஷ்மி, பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பாகப் பங்கேற்று இரண்டாமிடம் பெற்றுள்ளார். இதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவும் தேர்வாகியுள்ளார்.
எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் சித்ரா மாணவியின் சாதனையை பாராட்டினர்.
