டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. என்.ஜி.பி ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமை தாங்கினார்.

கோவை, குளோபல் பிசினஸ் கன்சல்டிங் நிர்வாக இயக்குநர் சிவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் கற்கின்ற வயதில் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு புத்தகம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும். மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் ஐயாவின் தீவிர வாசிப்புப் பழக்கம் மட்டுமே அவரது வாழ்வியல் முன்னேற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்திருந்தது. புத்தக வாசிப்பிற்கு எல்லையில்லை. எனப் பேசினார்.

NGP2

கல்விசார் செயல்பாடுகளுக்கான விருதுகளைச் சிறப்பு விருந்தினர், மாணவர்களுக்கு வழங்கினார். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், கல்விசார் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பேராசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் சரவணன், முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், துணைமை செயல் அலுவலர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.