கோவை மாவட்டம், காளப்பநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் முப்பெரும் விழா மற்றும் அனன்யா செல்டர்ஸ் சார்பில் ரூ.75 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடம் மற்றும் உணவு கூடம் புதுப்பித்து வழங்கும் விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியின் நூற்றாண்டு விழா, பள்ளி நூற்றாண்டு நினைவு கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் பள்ளி கட்டிடங்கள் கட்டி தந்த அனன்யா குழுமத்திற்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

1 scaled

முதன்மை விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கலந்து கொண்டு பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து, கல்வி மலர் புத்தகத்தை வெளியிட்டு, நன்கொடையாளர்களை பாராட்டினார். சிறப்பு விருந்தினராக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டார்.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கலந்துகொண்டார். பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் விழாவிற்கு தலைமை வகித்தார். அனன்யா குழுமத்தின் இணை நிர்வாக இயக்குனர் உமா மகேஸ்வரி யுவராஜ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

10 scaled

விழாவில் கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலர் – I, ராஜேந்திரன், வட்டார கல்வி அலுவலர் – II, ராஜம்மாள், பேரூர் துணை கண்காணிப்பாளர் செல்லதுரை மற்றும் வடவள்ளி காவல் ஆய்வாளர் சாரதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

4 scaled

அனைத்து உதவிகளும் செய்ய தயார்!

– யுவராஜ், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், அனன்யா குழுமம்

அனன்யா குழுமத்தின் சார்பில் மூத்த குடிமக்களுக்கு எண்ணற்ற சேவைகளையும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதில் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனமாக அனன்யா குழுமம் இருப்பதில் பெருமை கொள்கிறோம்.

5 scaled

சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு எங்களது பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு மூலம் ரூ. 75 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடம் மற்றும் உணவுக்கூடத்தை புணரமைத்து கொடுத்துள்ளோம்.

இங்கு பயிலும் மாணவர்கள் நல்ல முறையில் பயின்று வரும் காலங்களில் மிகப்பெரிய அரசு பணிகளிலும், தொழிலதிபர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இனிவரும் காலங்களில் அனைத்து விதமான உதவிகளும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். இங்குள்ள மாணவர்கள் இப்பள்ளியின் வளத்தையும் சுற்றுப்புற சூழலையும் முறையாக பராமரிக்க வேண்டும்.

3