நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தின் அடையாளமான இருவாச்சி பறவையின் வடிவில் “வாக்கு வீரன்” என்ற வாக்காளர் விழிப்புணர்வு இலட்ச்சினை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த இலட்ச்சினையை, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் புதன்கிழமை (25.02.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மகேஸ்வரி, வட்டாட்சியர் தனிகைவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.