நேரு விமானவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவியருக்கான 19வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக காருண்யா தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் எலையா பிளஸ்சிங் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.
நேரு கல்வி குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். செயல் இயக்குநர் நாகராஜா வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் பாலாஜி, இளங்கலை மற்றும் முதுகலைத் துறைத் தலைவர்கள் முறையே சிங்காரவடிவேலு, மல்லிகா, பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
