மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 15ம் தேதி கோவை வருவதை முன்னிட்டு, கோவை மாநகரின் பல்வேறு இடங்biகளில் ட்ரோன்கள் பறக்க தடை அமல்படுத்தப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.
கோவை மாநகர காவல் துறை இது பற்றி கூறியதாவது :-
கோவை மாநகரில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன் சேர்த்து சிங்காநல்லூர், எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், நேருநகர், சிட்ரா, பீளமேடு, லட்சுமி மில்ஸ், இராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ், செல்வபுரம், காந்திபுரம், வீரகேரளம், சாய்பாபா காலனி, வடவள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் தற்காலிகமாக ரெட் ஜோன் எனும் தடைபடுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இன்று (13.02.2026) இரவு 9 மணி முதல் ஞாயிறு (15.2.26) இரவு 9 மணி வரை 48 மணி நேரம் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
