கோவை கம்பன் கழகத்தின் 54ஆம் ஆண்டு கம்பன் விழா, பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை தொடங்கியது.

கம்பன் கழகம் துணைத்தலைவர் பாலசுந்தரம் வரவேற்புரை வழங்கினார். தொடக்க நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சுரேஷ்குமார் தலைமையுரை வழங்கினார்.

KAMBAN

மதுரை கம்பன் கழகம் தலைவர் சங்கர சீத்தாராமன் 54ஆம் ஆண்டு கம்பன் விழா மலர் வெளியீட, சி.ஆர்.ஐ. பம்ஸ் நிறுவனங்கள் துணைத் தலைவர் சௌந்தரராஜன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மதுரை கம்பன் கழக பொருளாளர் சொ.சொ.மீ.சுந்தரம் இலக்கிய பேருரை வழங்கினார்.

நிகழ்வில் கோவை கம்பன் கழக தலைவர் பதி, துணைத் தலைவர்கள் சுனிதா சாந்தாராம், செல்வபதி, பாலசுந்தரம், பொருளாளர் இராசேந்திரன், செயலாளர் முருகேசன், இணைச் செயலர் சத்தியநாராயணன் உள்ளிட்ட நிர்வாகக்குழுவினர் கலந்துகொண்டனர். ஞாயிற்றுக் கிழமை நடந்த இரண்டாம் நாள் நிகழ்வில், சுழலும் சொல்லரங்கம் பேச்சுப் போட்டி, பொருள் தெறி அரங்கம், நாட்டிய நாடகம், பட்டிமண்டபம் உள்ளிட்டவை நடைபெற்றன.

KAMBAN 3 scaled