ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதுடெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்.
தொடர்ந்து புதுடெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பங்கேற்ற மாணவர் தர்ஷன், சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பங்கேற்ற மாணவி ஸ்வாதி, தேசிய மாணவர் படை சார்பில் பங்கேற்ற மாணவி சந்தியா, மாணவர் ஆகாஷ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.
இதேபோல் புதுடெல்லியில் நடைபெற்ற அகில இந்திய தால்சைனிக் முகாமில் பங்கேற்ற, மாணவி திவ்யா ஸ்ரீ லட்சுமி, மஹாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய மாணவர் படை இயக்குநரகங்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற மாணவி ஜனனி ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.
