இந்திய ஸ்பீடு ஸ்கேட்டிங் சம்மேளனம் சார்பில், தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்கம் நடத்திய, “25 ஆவது தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் பந்தயம்” சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில், ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 ம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சார்பில் பங்கேற்ற, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பி.காம். கணக்கியல் மற்றும் நிதியியல் துறை மூன்றாமாண்டு மாணவி ஜோஷினி, 1000 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும், 400 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங் மற்றும் பாய்ண்ட் டூ பாய்ண்ட் பிரிவில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும் வென்றார்.
இதன்மூலம் இந்தோனேஷியாவில் நடைபெற உள்ள, சர்வதேச அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவி ஜோஷினியை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் பாராட்டினார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தனது பாராட்டுகளை, மாணவிக்குத் தெரிவித்தார்.

