ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் சித்ரா கொடியேற்றி தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, தியாகங்கள், தேசத்தின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் செய்ய வேண்டிய பங்கு போன்றவற்றைப் பற்றி மாணவிகள் உரை நிகழ்த்தினர்.
தொடர்ந்து நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படையின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
