கோவையில் ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்வாமிகளின் பட்டாபிஷேகம் மற்றும் ஜென்ம தின விழா பிப்.18 முதல் பிப்.24, 2026 வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து கோவை ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ சேவா சங்கத் தலைவர் சுந்தரவடிவேலு, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியும், நிகழ்சி தலைவருமான ஸ்ரீனிவாஸ் பத் மற்றும் செயலாளர் ராம்ராஜ் ஆகியோர் கூறியதாவது:
ராம்நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜை சங்கம் வளாகத்தில் ஒரு வாரம் நடைபெறும் இம்மஹோத்சவம், மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிஜியின் பட்டாபிஷேகம் மற்றும் ஜன்ம தினோத்சவத்தை நினைவுகூரும் வகையில் நடத்தப்படுகிறது.
ஸ்ரீ ராகவேந்திரா சப்தாஹ காரியசரண சமிதி, ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ சேவா சங்கம், கோவை மற்றும் ஸ்ரீ ஐயப்பன் பூஜை சங்கம் ஆகியவை இணைந்து விழாவை ஏற்பாடு செய்கின்றன.
குருராஜ சன்னிதானத்தில் தினமும் காலை 7.30 மணிக்கு பாராயணம், 8 மணிக்கு பஞ்சாம்ருத அபிஷேகம், லட்ச புஷ்பார்ச்சனையுடன் பாதபூஜை, கனகாபிஷேகம் நடைபெறும். காலை 10.30 மணிக்கு மகாமங்களாராதி, மாலை 7 மணிக்கு தீபோத்ஸவம் மற்றும் மஹாதீபோத்சவம், இரவு 10.30 மணிக்கு ஸ்வஸ்தீபத்ஸவம் நடைபெறும்.
சப்தாஹத்தின் போது தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை அனந்தபுரத்தைச் சேர்ந்த வித்வான் அப்பண்ணாச்சாரியார், சதானந்த சாஸ்திரி ஆகியோரால் சுப்ரபாதம், பிரதா ஸ்மரணை, வேத பாராயணங்கள் நடைபெறும்.
காலை 7.30 மணி முதல் 9 மணி வரை தாரதம்ய பஜனை, பாராயணம், 9 மணி முதல் 9.30 மணி வரை உடுப்பி பலிமாரு மடத்துடன் தொடர்புடைய அறிஞர்களின் பிரவசனங்கள் நடைபெறும். மஹோத்சவத் தொடக்க விழா பிப்.18 அன்று மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
