சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உயிர் கிளப் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக உயிர் கிளப் திட்ட இயக்குநர் சதீஸ்குமார் கலந்துகொண்டார்.

இதில் தலைக்கவசம் அணிவதன் அவசியம், மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்குவதன் நன்மைகள், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

நிகழ்வில் முதல்வர் ராஜ்குமார், இயக்குனர் சேகர், மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.