தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த பயிற்சி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவ, மாணவியர்கள், இதர பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் பங்குபெறலாம்.
இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக வளாகத்தில் வரும் பிப்ரவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் நபர் ஒருவருக்கு ரூபாய் 3540. பயிற்சிக்கு குறைந்த எண்ணிகையிலான இடங்களே உள்ளன.
பதிவுக்கு தொடர்பு கொள்ள
மின்னஞ்சல்: [email protected]
தொலைபேசி எண்: 0422 – 6611310
கைபேசி எண்: 8220661228
